Skip to content
Home » அனுமன் ஜெயந்தி விழா….நாமக்கல்லில் கோலாகலம்

அனுமன் ஜெயந்தி விழா….நாமக்கல்லில் கோலாகலம்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இன்று (வெள்ளிக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாத்தப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது.

இதனைதொடர்ந்து 1,00,008 வடை மாலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். . பக்தர்களின் வசதிக்காக கோட்டை சாலையில் இன்று ஒருநாள் மட்டும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இன்று 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு, நல்லெண்ணைய், 1008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்த்தூள், பஞ்சாமிர்தம் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு மகா தீபாரதனை நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!