குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக இன்றுபதவியேற்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

காந்தி நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ. ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கு பாஜகசார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை விமானம் மூலம் குஜராத் புறப்பட்டுச் சென்றார்.
இந்த விழாவில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்கும்பட்சத்தில், அவர் பிரதமரை சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும் அழைப்பு வந்திருப்பதாகவும், ஆனால், அவர் விழாவில் பங்கேற்கச் செல்லவில்லை , வாழ்த்து செய்தி அனுப்பியதாவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன..