Skip to content
Home » கவர்னர் ரவி, அண்ணாமலை திடீர் டில்லி பயணம்

கவர்னர் ரவி, அண்ணாமலை திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனித்தனியாக டில்லிக்கு செல்கின்றனர். கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டில்லி செல்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டப்சபையில் இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில் கவர்னர் டில்லி செல்கிறார். அதைபோல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டில்லி செல்கிறார். அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகிய நிலையில்டில்லி செல்கிறார்.  அண்ணாமலை பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 26ம் தேதி சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே இன்று சந்திக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!