Skip to content
Home » பொற்கோவிலில் பெண்ணுக்கு அனுமதி மறுப்பு…. குருத்வாரா கமிட்டி விளக்கம்

பொற்கோவிலில் பெண்ணுக்கு அனுமதி மறுப்பு…. குருத்வாரா கமிட்டி விளக்கம்

அமிர்தசரஸ், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் புகழ் பெற்ற சீக்கிய கோவிலான பொற்கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண் துணையுடன், பெண் ஒருவர் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலானது.  அதில், அந்த பெண் பொற்கோவிலுக்குள் செல்ல ஏன் தன்னை அனுமதிக்க முடியாது? என்று கேட்டதற்கு, அனுமதி மறுத்த நபர், பெண்ணின் முகத்தில் வர்ணம் பூசிய கொடியின் உருவம் இருந்த விவரங்களை சுட்டி காட்டியுள்ளார்.  இது பஞ்சாப் என்றும் இந்தியா அல்ல என்றும் அந்த நபர் வீடியோவில் கூறுகிறார். இந்த வீடியோ வைரலானதும் அதற்கு சமூக ஊடகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

இதனை தொடர்ந்து, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியை சேர்ந்த பொது செயலாளர் குர்சரண் சிங் கிரெவால் நடந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறும்போது, இது சீக்கிய கோவில். ஒவ்வொரு மத தலத்திற்கும் என்று ஒழுங்கு இருக்கும். நாங்கள் ஒவ்வொருவரையும் வரவேற்கிறோம். அதிகாரி ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்றால் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.  அந்த பெண்ணின் முகத்தில் இருந்த கொடி நம்முடைய தேசிய கொடி இல்லை. அதில் அசோக சக்கரம் இல்லை. அது ஓர் அரசியல் கொடியாக கூட இருக்கலாம் என விளக்கம் அளித்து உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!