Skip to content
Home » உலக தடகளம்…3 தங்கம் வென்ற இந்திய தங்க பாட்டி பகவானி தேவி

உலக தடகளம்…3 தங்கம் வென்ற இந்திய தங்க பாட்டி பகவானி தேவி

  • by Senthil

போலந்து நாட்டின் தோரன் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் நடந்தது. உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த போட்டியில், 90 முதல் 95 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவை சேர்ந்த பகவானி தேவி (வயது 95) என்ற மூதாட்டி கலந்து கொண்டார்.  அவர், 60 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய 3 பிரிவுகளில் விளையாடி, மூன்றிலும் தங்க பதக்கங்களை வென்று அசத்தி உள்ளார். இந்நிலையில், போலந்தில் இருந்து டில்லி வந்திறங்கிய அவரை மேளதாளங்கள் முழங்க உறவினர்கள் வரவேற்றனர்.

3 தங்கம் வென்ற தங்க பாட்டி பகவானி தேவி செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

கடுமையாக உழைத்து, வெற்றிக்காக பாடுபடு என்பதே எனது செய்தி. குழந்தைகள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு பெற்றோர் ஆதரவு அளிக்க வேண்டும். சொந்த நாட்டுக்காக பதக்கம் வெல்வதற்கு ஏற்ற வகையில் அவர்களை தயார் செய்ய வேண்டும் ‘ என்றார்.3

அரியானாவில் கேத்கா கிராமத்தில் பிறந்த அவருக்கு, 12 வயதில் இளமையிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. 30 வயதில் அவரது கணவர் காலமானார். அவரது ஆண் குழந்தையும் அப்போது உயிரிழந்தது. தனது மகள் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தைக்காக வாழ வேண்டும் என கர்ப்பிணியான பகவானி தேவி மறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

4 ஆண்டுகளுக்கு பின், 8 வயதில் அவரது மகளும் உயிரிழந்து விட்டார். எனினும் வயல்வெளியில் வேலை, சோர்வின்றி நீண்டநேரம் உழைப்பு என வாழ்க்கை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அவரது மூத்த சகோதரியும் அதே குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு உள்ளார். அதனால், அவரது ஆதரவு பகவானி தேவிக்கு கிடைத்து உள்ளது. இறுதியாக அவரது முயற்சியில் பலன் கிட்டியது. தேவியின் வாழ்க்கையில் இருந்த ஒரே மகனுக்கு டில்லி மாநகராட்சியில் ஊழியராக வேலை கிடைத்தது. அவர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலையும் மேம்பட்டது. இந்த வயதிலும் தடகளத்தில் ஜொலித்து வரும் அவர், கடந்த ஆண்டு ஜூலையில், பின்லாந்து நாட்டில் நடந்த உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை அள்ளி வந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!