கருணாநிதி முதல்வராக இருந்த 1973ல் தமிழகத்தில் பெண் போலீஸ் படை பிரிவு தொடங்கப்பட்டது. 1 எஸ்.ஐ 21 காவலர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிரிவு இன்று 35 ஆயிரத்து 329 பேருடன் பெரும் அளவில் வளர்ந்து நிற்கிறது. தற்போது தமிழக பெண் போலீஸ் தொடங்கப்பட்ட பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இப்போது கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்து பொன்விழா ஆண்டை கொண்டாடுகிறார்.

இதற்கான விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. விழாவில் பெண் போலீசாருக்கு பதக்கங்கள், கோப்பைகள் வழங்கி முதல்வர் சிறப்பித்தார். இந்த விழாவுக்கு வந்த முதல்வரை பெண் போலீசாரின் குதிரைப்படை பிரிவினர் முதல்வரை அழைத்து வந்தனர். அத்துடன் பெண் கமாண்டோ படை பிரிவினரின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் விழாவில் நடத்தி காட்டப்பட்டது.
தமிழகத்தில் முதல் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த திலகவதி, முதல் பெண் டிஜிபி லத்திகா சரண், மற்றம் தமிழக கேடரை சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ கூடுதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்றார். மேற்கண்ட மூவரும் இந்த விழாவில் பங்கேற்றனர். விழாவில் பெண் போலீசாரின் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டது.