Skip to content
Home » ஷூட்டிங்கில் தீ… பிரபல நடிகை உயிர் தப்பினார்

ஷூட்டிங்கில் தீ… பிரபல நடிகை உயிர் தப்பினார்

காமெடி, திரில் கலந்து உருவாகி வரும் திரைப்படம் தி விர்ஜின் ட்ரீ. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தின் வழியே தயாரிப்பாளர் ஆகியுள்ளார். த்ரீ டைமன்சன் மோசன் பிக்சர்ஸ் என்ற பெயரிடப்பட்ட நிறுவனம் சார்பில் அவர் தயாரிக்கும் இந்த படத்தில் நாகின் புகழ் நடிகை மவுனி ராய் நடிக்கிறார். இதுதவிர, சன்னி சிங் மற்றும் பாலக் திவாரி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்தபோது, நடிகை மவுனி ராய் இருந்துள்ளார். அவருக்கான சீன் எடுக்கப்பட இருந்தது. அப்போது, கேமிரா வெடித்து தீ பரவியுள்ளது. எனினும், இந்த சம்பவத்தில் அவர் உயிர் தப்பி விட்டார். யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. தீ விபத்தினால் படப்பிடிப்பு 2 மணிநேரம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் தகவல் அறிந்து உடனடியாக வந்து நெருப்பை அணைத்தனர். எனினும், படத்திற்காக போடப்பட்ட செட் 20 முதல் 30 சதவீதம் அளவுக்கு தீ விபத்தில் சேதமடைந்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!