தஞ்சை வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான உரங்களின் கையிருப்பு மற்றும் வரத்து, எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொ) சுஜாதா தலைமை வகித்தார்.
நடப்பு சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் அக்டோபர் மாத தேவை விபரம், கையிருப்பு விபரம் உள்ளிட்டவை உர உற்பத்தி நிறுவன வாரியாக ஆய்வு நடந்தது.
தற்போது நடவு பணிகள் முழு வீச்சில் நடைப் பெற்று வருவதால், அடி உரமாக இட தேவைப்படும் டி ஏ பி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை போதுமான அளவு அரசு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து விநியோகித்திட அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, பேராவூரணி உள்ளிட்டப் பகுதிகளைச் சார்ந்த உர மொத்த விற்பனையாளர்கள் கலந்துக் கொண்டு தங்களது கருத்தினைதெரிவித்தனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் தர கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் (பொறுப்பு) நிவேதா, வேளாண் அலுவலர் ரேணுகா செய்திருந்தனர்.