தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு )சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்பொழுது சம்பா சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தற்போது தஞ்சைக்கு 1300 மெ.டன் டி ஏ பி உரம் வந்தடைந்துள்ளது. இங்கிருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும், மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு தேவையான உரங்களான யூரியா 10747 மெ.டன், டிஏபி 2593 மெ.டன், பொட்டாஷ் 1693 மெ.டன், காம்ப்ளக்ஸ் 3664 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 982 மெ.டன் உள்ளிட்டவை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க வேளாண்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.