Skip to content
Home » ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … காங் வேட்பாளர் யார்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … காங் வேட்பாளர் யார்?

  • by Senthil

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.  இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக திமுக அறிவித்துள்ள நிலையில் வேட்பாளர் யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மறைந்த எம்.எல்.ஏ.வின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தேர்தல் களத்தில் மக்களை சந்தித்தால், அவர்கள் வெற்றி பெறுவது எளிது என்று ஒரு கருத்து இருக்கிறது. எனவே மறைந்த எம்.எல்.ஏ.வின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவரது மனைவி வரலட்சுமி இளங்கோவன் மற்றும் இளைய மகன் சஞ்சய் சம்பத், திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா ஆகிய 4 பேரில் யாராவது நிற்க வேண்டும் என்று ஈரோடு காங்கிரசார் விரும்புகிறார்கள். கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் இவர்தான் என்று காங்கிரஸ் கட்சியினராலே சுட்டிக்காட்டப்பட்ட முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஆகியோரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள்.  வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எடுப்பார்கள் என மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். அப்படி இளங்கோவன்  குடும்பத்தினர் என்றால் சஞ்சய் சம்பத் களம் இறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!