Skip to content
Home » வாக்குவிகிதம் 80%யை தாண்டும்? உற்சாகத்தில் திமுக.. அப்செட்டில் அதிமுக..

வாக்குவிகிதம் 80%யை தாண்டும்? உற்சாகத்தில் திமுக.. அப்செட்டில் அதிமுக..

  • by Senthil

விறுவிறுப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி வரை 71 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவாகியுள்ளது.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 66 சதவீத வாக்கு பதிவான நிலையில் இம்முறை கூடுதல் வாக்குப்பதிவு. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

மாலை 6 மணி வரை வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் – வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

3 மணி வாக்குப்பதிவு நிலவரம்:

ஆண்கள் – 65350

பெண்கள் – 69400

திருநங்கை/திருநம்பிகள் –  8

மொத்தம் – 134758

வாக்கு சதவீதம் – 59.22%

 5 மணி நிலவரப்படி 70.58 % வாக்குப்பதிவு

6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் பல வாக்குசாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி வாக்குசதவீதம் 80 % யை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலை விட இடைத்தேர்தலில் சுமார் 15 சதவீதத்திற்கும் மேலாக வாக்குவிகிதம் இருக்கும் என்பதால் இந்த வாக்குவிகிதம் திமுகவிற்கு உற்சாகத்தையும், அதிமுகவிற்கு பதட்டத்தையும் கொடுத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!