Skip to content

கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

மறைந்த முன்னாள்  கோவை மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளரிடம்  எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டி வருவதாகவும், இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவதுடன், விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்றார். கர்நாடக அரசும் மேக தாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி இருப்பதாகவும், இதே போல் ஆந்திரா அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறினார். அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக இருப்பதற்கு  அதிமுக சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடி நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் . தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், பல்வேறு தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்த்தார்.  அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டப்பட்டது., அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட் டுவிட்டது.

நடந்து முடிந்த தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்குகளை திமுக அரசு திட்டமிட்டு நீக்கி உள்ளது.  இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத  தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது . தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் 40 இடங்களிலும்  அதிமுக மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.  எடப்பாடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கோவை வேலுமணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவுக்கு  கோவை வேலுமணி வரவில்லை என்று கூறப்பட்ட நி்லையில் இன்றும் கோவை  வந்தபோது கூட எடப்பாடியின் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!