Skip to content
Home » அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் வாழ்த்திய துரை வைகோ….

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் வாழ்த்திய துரை வைகோ….

  • by Senthil

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர்  உதயநிதி ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, தி.மு.இராசேந்திரன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியதேவன், சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் மு.பூமிநாதன், அரியலூர் கு.சின்னப்பா, மருத்துவர் சதன் திருமலைக்குமார், மருத்துவர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், மாவட்டச் செயலாளர்கள் கே.கழககுமார், டி.சி.இராசேந்திரன், சைதை பி.சுப்பிரமணி, ஊனை பார்த்திபன், பூவை மு.பாபு, ஆவடி இரா.அந்திரிதாஸ், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சிக்கந்தர், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் கனல் காசிநாதன், எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார் ஆகியோர் உடனிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!