Skip to content
Home » குடிநீர் துண்டிப்பு….கரூர் மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய தந்தை , மகன் கைது…

குடிநீர் துண்டிப்பு….கரூர் மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய தந்தை , மகன் கைது…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி, வரியில்லா இனங்கள், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றில் நிலுவை தொகைகளை 15.12.2022க்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் வரி நிலுவை வைத்திருப்பவர்கள் பெயர் பட்டியல் கரூர் மாநகராட்சி இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்படும் என கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியில் வரி செலுத்தாமல் நிலுவைத்தொகை வைத்துள்ள 100 குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சீனிவாசன் என்பவரது வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை சீனிவாசன் (63) மற்றும் அவரது மகன் செந்தில்குமார் (37), மணி (40) ஆகிய மூன்று பேர் தாக்கியுள்ளனர். செந்தில்குமார் மற்றும் மணி ஆகிய இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக அப்பகுதிக்கு வந்து பார்வையிட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் ரவி, வருவாய் அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினர். அதனைத் தொடர்ந்து ஆணையர் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் ரவி தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாநகராட்சி அதிகாரிகள் புகாரை ஏற்று, ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனிவாசன் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் தப்பியோடிய மணி என்ற நபரை தேடி வருகின்றனர்.

உடனடியாக அப்பகுதிக்கு வந்து பார்வையிட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் ரவி, வருவாய் அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினர். அதனைத் தொடர்ந்து ஆணையர் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் ரவி தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாநகராட்சி அதிகாரிகள் புகாரை ஏற்று, ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனிவாசன் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் தப்பியோடிய மணி என்ற நபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!