Skip to content
Home » திமுக மாஜி எம்.பி. மஸ்தான் காலமானார்…..

திமுக மாஜி எம்.பி. மஸ்தான் காலமானார்…..

  • by Senthil

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் உயிரிழந்தார். இந்நிலையில் மாநிலங்களவை திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உடல் நலக்குறைவால் காலமானார்.  சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார். மறைந்த முன்னாள் எம்.பி. மஸ்தான் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் துணைத் தலைவராக இருந்தவர்.  அதிமுகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக டாக்டர் மஸ்தான் 1995 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்,  2001 வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் எம்.பி. மஸ்தான் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் இரங்கல் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!