Skip to content
Home » டில்லி  மாநகராட்சி தேர்தல்….. ஆம் ஆத்மி கட்சி முன்னணி

டில்லி  மாநகராட்சி தேர்தல்….. ஆம் ஆத்மி கட்சி முன்னணி

  • by Senthil

டில்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் டில்லியை ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவானது.

இன்று  காலை  8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி 42 மையங்களில் தொடங்கியது. 68 கண்காணிப்பாளர்கள் இந்த பணியை கண்காணித்து வருகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களில் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய 136 பொறியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு வசதியாக வாக்கு எண்ணும் மையங்களில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை  தொடங்கிய 1 மணி நேரத்தில், அதாவது காலை 9 மணிக்கு  மொத்தம் உள்ள 250 வார்டுகளில் ஆம் பா.ஜ.க. 126 இடங்களில் முன்னிலையில் இருந்தது.  ஆம் ஆத்மி 109 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னணியில் இருந்தது

9.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 122 இடங்களிலும், பா.ஜ.க. 117 இடங்களிலும் முன்னணியில் இருந்தது.  அதாவது பா.ஜ.கவுக்கு முன்னணி குறையத்தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!