Skip to content
Home » கொரோனா மரபணு மாற்றம் …. தமிழகத்தில் கண்காணிப்பு…… அமைச்சர் மா.சு. திருச்சியில் பேட்டி

கொரோனா மரபணு மாற்றம் …. தமிழகத்தில் கண்காணிப்பு…… அமைச்சர் மா.சு. திருச்சியில் பேட்டி

  • by Senthil

சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்  திருச்சி விமான நிலையத்தில்  இன்று அளித்த பேட்டி:

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவினால் இறப்பு இல்லை. கடந்த 10 தினங்களாக கொரோனா ஒற்றை இலக்கத்தில் உள்ளது.கொரோனா உயிரிழப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அதற்கு காரணம், தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தமிழக முதல்வர் மாற்றியதுதான். தமிழகத்தில் கொரோனா மரபணு சோதனை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பிரத்யேக ஆய்வகம் தமிழகத்தில், சென்னையில், 4 கோடி ரூபாய் செலவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றத்தை கண்காணித்து வருகிறோம். சீனா, ஜப்பானில் ஒமிக்ரான் பரவிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சீர்காழியைச் சேர்ந்த 13 வயது மாணவி அபிநயா தோல் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் ,அது குறித்து அபிநயா முதல்வருக்கு கோரிக்கை வைத்த வீடியோ வைரலானது
குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாசுப்பிரமணியன்,
அபிநயாவிற்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாத நோய் பிரிவில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அவரை இன்று மதியம் நானே நேரில் சென்று விசாரிக்க உள்ளேன்.
மாணவி அபிநயாவிற்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்.

பத்திரிக்கை, ஊடகங்கள்,சமூக வலைதளங்களில் இதுபோன்று கோரிக்கைகள் வரும் பட்சத்தில் அவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!