Skip to content
Home » பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்…

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்…

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நன்னிமங்கலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் உள்ளே மூன்று பொதுபாதைகள் உள்ளன. அதில் ஒரு பொது பாதையை மரியதனபால் மற்றும் பால்ராஜ் என்பவரும் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சென்னை நீதிமன்ற மதுரை கிளையில் பொது பாதையை அகற்றக்கோரி கடந்த 2022 ஆம் ஆண்டு 6வது மாதம் புதுப்பாதையை ஆக்கிரமித்தவர்களை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பொதுபாதையை ஆக்கிரமித்த

வீடுகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார் . இதனை அடித்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் லால்குடி நகராட்சி ஆணையர் குமார் தலைமையில் 7க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுப் பாதையை பொக்லின் இயந்திரத்தைக் கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றினர். மரிய தனபால் என்பவர் பொதுபாதை ஆக்கிரமித்து 35 லட்ச ரூபாய்க்கு மேல் புதிய வீடு கட்டியுள்ளார் அதனை நகராட்சி ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!