Skip to content
Home » வெளிநாடுகளில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..

வெளிநாடுகளில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா பரவி கோடிகணக்கானோர் பலியாகினர். எனினும், கடந்த ஓராண்டாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் குறைந்து, படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.  இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா 3வது அலை உருவாகி அதிவேகமாகப் பரவி வருகிறது. அந்த நாட்டில் ஒமைக்ரான் பி.எஃப்.7 என்ற வகை வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுகிறது.  இது தொடர்பாக சீனாவில் தொற்றுநோய் நிபுணரும், சுகாதாரப் பொருளியல் வல்லுநருமான எரிக் பெய்கிள் டிங், வால் ஸ்டீரிட் ஜெர்னல் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில்.. சீனாவில் மீண்டும் கொரோனா  வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, பெய்ஜிங்கில் கொரோனானவிற்கு பலியானவர்களின் சடலங்களை மருத்துவமனைகளில் அதிகம் காணமுடிகிறது. இதேநிலை நீடித்தால், சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது என அச்சம் தெரிவித்துள்ளார்…

உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது..  இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில்.. சீனா, அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். தொற்று அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். புதிய வகை கொரோனா வைரஸ்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவை பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய சுகாதாரத் துறை வழங்கும். இவ்வாறு ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!