Skip to content
Home » கனெக்ட் படத்தை கணவருடன் பார்த்த நயன்தாரா……

கனெக்ட் படத்தை கணவருடன் பார்த்த நயன்தாரா……

  • by Senthil

பிரபல நடிகையான நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘மாயா’. இந்த படத்தன் வெற்றிக்கு பிறகு அதே பாணியில் உருவாகும் ‘கனெக்ட்’ படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தை ‘மாயா’ இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

connect

நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

connect

இந்த படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பிரத்யேக காட்சியை பிரபல திரையரங்கிற்கு சென்று நடிகை நயன்தாரா பார்த்தார். அவருடன் கணவர் விக்னேஷ் சிவனும் இருந்தார். திரையரங்கிற்கு நயன்தாரா வந்த போது ரசிகர்கள் ஆர்பரித்து கத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!