Skip to content
Home » ராகுல் நடைபயணம் நிறைவு…. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்….

ராகுல் நடைபயணம் நிறைவு…. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்….

  • by Senthil

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி   கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைகான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தேச பிதா மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளில் இன்றுடன்(30-01-23) நிறைவு பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள தேசபிதா மகாத்மா காந்தி அவர்களின் திரு உருவ சிலைக்கும்,அவரது அஸ்தி மண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் பாலக்கரை கோட்டம் மார்க்கெட் மாரியப்பன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சந்து கடையில் வார்டு தலைவர் சந்துக்கடை சம்சுதீன் தலைமையில் தேசிய கொடி ஏற்றி வெற்றி தேசிய நடை பயணம் நிறைவை ஒட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தேசிய கொடியேற்றி இனிப்புகளை பொதுமக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்

வழக்குரைஞர் எம் சரவணன் சிறப்பா அழைப்பாளராக கலந்து கொண்டு வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் மலைக்கோட்டை முரளி சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் முகமது ரபீக் பொறியாளர் பிரிவு தலைவர் சுதர்சன் திம்மை செந்தில் குமார் கலை பிரிவு தலைவர் ஸ்ரீ ராகவேந்திரா வெல்லமண்டி பாலசுப்பிரமணியன் மகளிர் அணி அஞ்சு கோகுல் கிருஷ்ணமூர்த்தி வாய்ஸ் மணிகண்டன் மன்சூர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கவி இர்ஃபான் வியன் மற்றும் ராமகிருஷ்ணன் அவருடைய குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காந்தி அஸ்தி மண்டப வாயிலில் ராமகிருஷ்ணன் குழுவினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரை எம் சரவணன் அவர்களிடம் பல பெரும் சுதந்திர போராட்ட தியாகிகளின் அஸ்தி மண்டபம் நினைவு கல்வெட்டு தண்டி யாத்திரை துவங்கிய இடம் ஆகியவற்றை போற்றி பாதுகாக்க வேண்டும் ஏனென்றால் இவை சுதந்திரத்திற்காக பாடுபட்டதின் அர்த்தத்தை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் ஆகையால் அதனை மாநில அரசிடம் கூறி உரிய பராமரிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!