Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய ”மகளிர் போலீஸ் தினம்”…..

முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய ”மகளிர் போலீஸ் தினம்”…..

  • by Senthil

தமிழக காவல் துறையில் 1973-ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு ஆகும். இதன்படி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற, தமிழக காவல் துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டு, ‘அவள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் மிதிவண்டித் தொடர் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்து, பெண் காவலர்களுக்கான 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில்  பெண்கள் தான் முதலமைச்சரை காக்கும் அரணாக இருந்தார்கள். பாதுகாப்பு பணியில் முழுக்க முழுக்க பெண் போலீசார் (Core Cell ) பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Core Cell எனும் வார்த்தையை 1996 ஆம் ஆண்டு கலைஞர் சொன்ன வார்த்தை. Core என்றால் மையம். மையத்தை சுற்றி பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் தான் Core Cell டீம். முதலமைச்சர் எங்கு சென்றாலும் அந்த இடத்தினை

பாதுகாப்பான இடமாக பார்த்துக் கொள்வது இவர்களின் அடிப்படைப் பணி.

இந்த Core Cell டீம் இல் இதுவரை தமிழ்நாட்டில் பெண்கள் இருந்தது இல்லை. முதலமைச்சராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற சில நாட்களில் Core Cell ல் பெண்கள் நியமிக்கப்பட்டார்கள்.உள்ளூர், வெளியூர், வெளிநாடு என எங்கு முதல்வரின் பயணத் திட்டம் இருந்தாலும் அங்கும் இந்தக் குழு சென்று முதல்வரின் பாதுகாப்பினை உறுதி செய்வார்கள்.

காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் அந்தஸ்து கொண்ட பெண் கமாண்டோக்கள் சிறப்பு தேர்வு மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற 9 பெண்கள் இக்குழுவில் இருக்கின்றனர்.

அதன் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த வியப்பையும், முதல்வருக்கு பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!