சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி , சேகர்பாபு ஆகியோர் சென்றனர். சமீபத்தில் மறைந்த ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் உருவப்படத்திற்க முதல்வர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓபிஎஸ்சிடம்துக்கம் விசாரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது ஓபிஎஸ்சுடன் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ்பாண்டியன் ஆகியோரும் உடனிருந்தனர்.