பெஞ்சல் புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தனது 1 மாத சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக காசோலையாக தலைமை செயலாளர் முருகானந்தத்திடம் வழங்கினார். புயல், வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உதவுவதற்காக இந்த நிதியை வழங்குவதாக முதல்வர் கூறினார்.