தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் இந்த படத்தை பார்க்கச் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ஒரு குழந்தை மயக்கம் அடைந்தது..
ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்பு காட்சி இன்று காலை திரையிடப்பட்ட போது பெரும் கூட்டம் காரணமாக நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். தனால் கூட்டம் கலைந்து ஓடியது. அப்போது ஏற்பட்ட நெருக்கடியில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது ஒரு குழந்தை மயக்கம் அடைந்தது. மயக்கம் அடைந்த குழந்தையை காப்பாற்ற போலீசார் மற்றும் அங்கிருந்த ரசிகர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.