Skip to content
Home » அரியலுார் அரசு பள்ளி மாணவி சர்வாணிகா… ஆசிய சதுரங்க போட்டியில் 6 தங்கம் வென்று சாதனை…..

அரியலுார் அரசு பள்ளி மாணவி சர்வாணிகா… ஆசிய சதுரங்க போட்டியில் 6 தங்கம் வென்று சாதனை…..

ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் முழு வெற்றிகளைப் பெற்று (Under-7 Rapid, blitz, standard) தங்கங்கள் வென்று சர்வாணிகா ஆசிய சதுரங்க போட்டியில் புதிய சாதனை.

இலங்கை CITRUS – வாஸ்கதுவாவில் 03-12-2022 முதல் 11-12-2022 வரை நடைபெற்ற 16வது மாபெரும் ஆசிய சதுரங்க போட்டியில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி(மேற்கு) மாணவி, இந்திய சதுரங்க வீராங்கனை சர்வாணிகா(வயது -7) இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.

1.சதுரங்க போட்டியின் முதல் பிரிவில் (Rapid under7) நடைபெற்ற 7 சுற்றுகளில் 7 வெற்றிகள் பெற்றார்.

2.இரண்டாம் பிரிவில்(blitz under7) நடைபெற்ற 7 சுற்றுகளில் 7வெற்றிகள் பெற்றார்.

3.மூன்றாம் பிரிவில்(standard) நடைபெற்ற 9 சுற்றுகளில் 9 வெற்றிகள் பெற்றார்.

இதன் மூலம் மூன்று பிரிவுகளில் நடைபெற்ற 23ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றிகளை

பெற்று, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மூன்று பிரிவுகளில் தங்க பதக்கங்கள் மற்றும் அணிக்கான பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 தங்க பதக்கங்கள் வென்றார்.

மூன்று கோப்பைகள் மற்றும் அணிக்கான கோப்பைகள் உட்பட
மொத்தம் 5 கோப்பைகளை வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!