திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சேகர், பாண்டியன் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர்.

அப்போது 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக தொடர்ந்து வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு ரூ 600 சம்பளம் வழங்கவும், மாற்றுத்திறனாளி வீடு இல்லாதவர்களுக்கு நில பட்டா வழங்கி தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும்,
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.