புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேக்குடிப்பட்டியில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னத்துரை , முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

————————————————————–
மேலும் புதுகை , அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேக்குடிப்பட்டியில் , பகுதிநேர நியாயவிலைக் கடையினை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். மேலும்
குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.
—————————————————————————
இதனை தொடர்ந்து புதுகை , முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களை அமைச்சர் ரகுபதி இன்று திறந்து வைத்தார். உடன் முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் , சிந்தனைசெல்வி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.