Skip to content
Home » பாபநாசத்தில் எம்எல்ஏ தலைமையில் அச்சு வெல்லம் மறைமுக ஏலம்….

பாபநாசத்தில் எம்எல்ஏ தலைமையில் அச்சு வெல்லம் மறைமுக ஏலம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அச்சு வெல்லம் மறை முக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். தஞ்சாவூர் விற்பனைக்குழு துணை இயக்குனர் வித்யா, தஞ்சாவூர் விற்பனைக்குழு, செயலாளர் சுரேஷ் பாபு, பிரச்சார கண்காணிப்பாளர் சித்தார்த்தன், தஞ்சாவூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முருகானந்தம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி  முன்னிலை வகித்தனர். ஏலத்தில் அதிகபட்சம் சிப்பம் ஒன்றிற்கு ரூ.1200/, குறைந்தப் பட்சம் சிப்பம் ரூ. 950/, சராசரி சிப்பம் ஒன்றிற்கு ரூ.1100/, என விலை நிர்ணயம் செய்யப் பட்டது. இதில் 10 வணிகர்கள், 21 விவசாயிகள் பங்கேற்றனர். பட விளக்கம்: பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் அச்சு வெல்லம் மறை முக ஏலம் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!