இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் தொடர்களில் ஆடியது. இதில் 2-1 என்ற நிலையில் இந்தியா தொடரை கைப்பற்றியது. கடைசி டெஸ்ட் (ஆமதாபாத் டெஸ்ட்) இன்று டிராவில் முடிந்தது. 4 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து ஆட்ட நாயகர்கள் விருதை இந்தியாவை சேர்ந்த அஸ்வின்(25 விக்கெட்), ஜடேஜா(22 விக்கெட்) ஆகியோர் பெற்றனர். 4வது டெஸ்டின் ஆட்ட நாயகன் விருதை கோலி பெற்றார். அடுத்ததாக 3 ஒன்டே போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது.
மார்ச் 17 – முதல் ஒருநாள் போட்டி – மும்பை
மார்ச் 19 – 2வது ஒருநாள் போட்டி – விசாகப்பட்டினம்
மார்ச் 22 – 3வது ஒருநாள் போட்டி – சென்னை ஆகிய இடங்களில் ஒரு நாள் போட்டிகள் நடக்கிறது.