Skip to content
Home » பாஜகவினர் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது … – அண்ணாமலை

பாஜகவினர் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது … – அண்ணாமலை

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பிறகு அண்ணாமலை கட்சி நிர்வாகிகளிடம் காட்டமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலை பேசுகையில், “சமீப காலமாக பாஜகவினர் பொதுவெளியில் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்று கட்சி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யார் ஈடுபட்டாலும் என்னுடைய நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். பாரபட்சம் இல்லாமல் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் பணியாற்ற வேண்டும். கட்சி வெற்றி பெறுவதற்கு பூத் கமிட்டி அவசியமாக இருக்கிறது. அதனால் 60,000க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும். பூத் கமிட்டிகள் அமைக்காத நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!