கரூர் சின்ன ஆண்டான்கோவில் சாலை ஓரத்தில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்,அங்கு இந்த குப்பைகள் குவிந்திருந்தால் எதிர்பாராதவிதமாக குப்பைகளில் தீ பற்றி எரிந்தது. அந்த தீ அருகில் இருந்த மின் கம்பத்திலும் பரவியது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக புகை மண்டலமாகி வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் சாலை ஓரத்தில் அதிகளவில் குப்பைகள் தேங்குவதை முறையாக ஊராட்சி நிர்வாகம் சரி செய்யாத காரணத்தினால் இது போன்ற சம்பவம் அடிக்கடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.