தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அறங்காவலர் அன்பழகன் சந்தித்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலினிக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் உள்ளார்.