திருச்சி சர்வதேச விமான நிலையம் தமிழகத்தின் 2 வது பெரிய விமான நிலையமாக விளங்கி வருகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிகளவு பயணிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் விமான நிலையத்தின் ரன்வேயை
சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழைய விமானநிலையத்தின் ( தற்போதைய கார்கோ) ரன்வேயை சீரமைக்கும் பணியினை விமான நிலைய குழுமம் மேற்கொண்டு வருகிறது..