புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் , பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை தொண்டைமான் அரச முத்திரை, புதுக்கோட்டை தொண்டைமான் அரச செப்பேட்டினையும் புதுக்கோட்டை அரசு அருட்காட்சியத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். உடன் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக் காப்பாட்சியர்
பக்கிரிசாமி , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் மற்றும் கல்வெட்டாய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.