நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற முருகனின் ஆதிபடை வீடான சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. சுப்ரமண்யசுவாமி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவின் 48 நாள் மண்டல பூஜையையொட்டி, நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிங்காரவேலவர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி

பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, தீர்த்த குளத்தில் மூன்று முறை வலம் வந்த சிங்காரவேலவரை திராளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். 40 ஆண்டுகளுக்குப் பின் நடைப்பெற்ற பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவ திருவிழாவில் நாகை திருவாரூர் காரைக்கால் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.