தமிழ் மக்களின் முக்கிய பண்டிகை பொங்கல் திருநாள் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் போகிப்பண்டிகை. இந்த இரு நாட்களும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் வருகிறது. எனவே மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை(13ம்தேதி)யும் விடுமுறை நாளாக அறிவிப்பது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது.

இதுபற்றிய அறிவிப்பு நாளை வெளியாகலாம் என தெரிகிறது.