பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி தாக்கியது. இதில் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி , சேலம், கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு திமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உணவு, துணிமணிகள், சமையல் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு 100 டன் அரிசி லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். அந்த அரிசி லாரிகள் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கிறது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.