மத்திய வா்த்தக அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் காலகட்டத்தில் ரூ.4,343 கோடி மதிப்பிலான வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 16.3 சதவீதம் அதிகமாவெங்ககும். இதில் டிசம்பா் மாதத்தில் மட்டும் வெங்காய ஏற்றுமதி மதிப்பு முந்தைய மாதத்தைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வெங்காய விதை ஏற்றுமதிக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:வெங்காயம் ஏற்றுமதி