கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சிறுகுன்ற,நல்லமுடி பூஞ்சோலை,புது தோட்டம்,சோலையார் அணை,நீரார் அணை,சிங்கோனா,பழைய வால்பாறை பாறமேடு,கேரளா எல்லை பண்ணிமேடு என தனியார் எஸ்டேட் மட்டும் வனப்பகுதி ஒட்டி ஏராளமான காட்டு யானைகள் உள்ளது,டிசம்பர் மாதம் என்பதால் கேரளாவில் இருந்து காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வால்பாறை நோக்கி அதிக அளவில் வந்துள்ளது,வனத்துறை உயர் அதிகாரிகள் உத்திரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகள் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் இருக்க சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், இந்நிலையில் வால்பாறை வனச்சரகம் தனியார் எஸ்டேட் பச்சமலை குடக்காடு பகுதியில் மனித விலங்கு மோதல் குழுவினர் இன்று காலை வனப்பகுதியில் ரோந்துப் பணியின் போதுஒன்னரை வயதான பெண் குட்டி யானை உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்து உள்ளது என்பது கண்டறியப்பட்டு வனத்துறை உயர் அதிகாரிகள் ஆனைமலை புலிகள் காப்பகம் கள சுப்பிரமணியம் இயக்குனர் துணை கள இயக்குனர் பார்கவே தேஜா ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன்,செந்தில்நாதன் இறந்த குட்டி யானை உடல் உடற் கூறு ஆய்வு செய்யப்பட்டது,வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் கூறுகையில் கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்த யானை கூட்டத்தில் இந்த குட்டி யானைகள் கூட்டத்தில் இருந்துள்ளது மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பெண்குட்டி யானை உயிரிழந்து உள்ளது விசாரனையில் தெரிய வந்துள்ளது என தெரிவித்தார்.