சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். பாமகவின் கோரிக்கைகளுக்கு சாதகமாகத் தான் நாங்களும் குரல் கொடுத்து வருகிறோம் என்று கூறினார்.
முதல்வரின் பதில் திருப்தி அளிக்காததால் பாமகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதனையடுத்து கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன் எங்கு அமைக்கப்படும் என் கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; மதுரை எய்ம்ஸ் அறிவித்தது போல் இல்லாமல் 2026- ஜனவரிக்குள் கோவையில் நூலகம் திறக்கப்படும். கோவையில் நூலகம் அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் அறிவித்ததைப் போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கோவையில் நூலகம் கட்டி முடிக்கப்படும். திறக்கப்படும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு (வானதி ஸ்ரீனிவாசன்) முறையாக அழைப்பு வரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.