டில்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 250 வார்டுகளிலும் பா.ஜ. மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரசும் பல தொகுதிகிளல் போட்டியிட்டது. இன்று காலை ஒட்டு எண்ணிக்கை நடந்தது. மாநகராட்சியை கைப்பற்ற 126 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆம் ஆத்மி 136 இடங்களை வென்று மாநகராட்சியை கைப்பற்றியது. பா.ஜ.க. 100 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 10 இடங்களிலும் சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கடந்த முறை பா.ஜ. வசம் இருந்த மாநகராட்சியை இப்போது ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.