தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கிறது. கட்டிடக்கலைக்கு இன்னும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் மிகப்பெரிய நந்தியம் பெருமாள் அமைந்துள்ளது. இந்த நந்தி சிலையில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் இதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த விரிசல் எப்போது ஏற்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. அதை வெள்ளை துணிபோட்டு மூடி வைத்திருந்தனர். அந்த துணி விலகிய நிலையில் 2 தினங்களுக்கு முன் பக்தர்கள் பார்த்து உள்ளனர். இதனால் இந்த செய்தி வெளியானது.
மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு நடக்கும் நந்தி சிலையில் ஏற்பட்ட விரிசல்களை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். மிகவும் பிரசித்தி பெற்ற நந்தி மண்டபத்தின் மேற்புற சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் பழமை அடைந்துள்ளதால் அதனையும் சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.