கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென தீ பிடித்து எரிந்தது. அந்த தீ , அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது.
இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் துணிகளை கொண்டும் தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். மின்மாற்றியில் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.