Skip to content
Home » திருச்சியில் மிருககாட்சி சாலை அமைகிறது….. அமைச்சர் நேரு தகவல்

திருச்சியில் மிருககாட்சி சாலை அமைகிறது….. அமைச்சர் நேரு தகவல்

திருச்சியில் நடந்த அரசு விழாவில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கலந்து கொண்டு 22 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவுக்கு  தலைமை தாங்கி அமைச்சர்  கே.என்.நேரு பேசியதாவது:

இளைஞரணி செயலாளராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக என ஏராளமான முறை திருச்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி வழங்கிய நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தில் தான் முதல்முறையாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும் தன் கையால் நிதி உதவியை வழங்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். சுமார் 4 மணி நேரத்திற்கும் அதிகமான நின்று கொண்டு மக்களுக்கு உதவியை வழங்கியவர் அவர்.

தொடர்ந்து, இன்றைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுயஉதவிக் குழுக்களை திருச்சியில் தொடங்கியது எங்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி. திருச்சியில் ஆரம்பித்த எதுவும் வீண் போனதில்லை. நீங்கள் சிறப்பான இடத்திற்கு வருவீர்கள் என்று வாழ்த்துகிறேன். பேரரசர் போல் தளபதி, சிற்றரசர் போல் உதயநிதி இங்கு வந்துருக்கிறீர்கள்.

இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், திருச்சிக்கென புதிய பேருந்து நிலையம், அறநிலையத்துறை மூலம் கோயில்கள்  திருப்பணிகள் செய்யப்பட்டு வரும் பணிகள், ஈரடுக்கு மேம்பால சாலை, வரஉள்ளது. அது சிந்தாமணியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக புதிய பஸ் நிலையம் வரை வர உள்ளது.

புதிய பாலங்கள், முசிறியில் குடிநீர் திட்டங்கள், புதுக்கோட்டையில் குடிநீர் திட்டங்கள், அரசு அலுவலகங்கள் என எண்ணற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் திருச்சியில் பொழுகுபோக்கு இல்லாத காரணத்தால், வனத்துறை மூலம் வனவிலங்கு காட்சி சாலை அமைப்பதற்கான முயற்சியும் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மிகமுக்கிய நகரமான திருச்சியில், அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *