தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் பேட்டி உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் அவரது பத்திரிகையாளர்கள் சந்திப்பு பெரும்பாலும் சர்ச்சையில் தான் முடிவடைந்து வருகிறது. தற்போது அவருக்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இனி அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி இனி அவரது பாதுகாப்பு பணியில் 28 முதல் 33 சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுவார்கள்.