நாடாளுமன்ற திறப்பு விழா வரும் 28ம் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார். ஜனாதிபதியை கொண்டு தான் நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அத்துடன் ஜனாதிபதியை புறக்கணித்து பிரதமர் திறந்து வைப்பதால் அந்த விழாவை புறக்கணிப்பதாகவும் மேற்கண்ட கட்சிகள் அறிவித்து உள்ளன.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இல்லாத, அதே நேரத்தில் பாஜகவை எதிர்க்காத ஒடிசா மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதா தளம் இந்த விழாவில் பங்கேற்கும் என அறிவித்துள்ளது. அதே போல ஆந்திர மாநிலத்தை ஆளும் கட்சியும், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் விழாவில் பங்கேற்கும் என அறிவித்துள்ளது.