தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி சசின்ன புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மீனாட்சி சுந்தரம் 52. டிரைவர். ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி மேல உளூர் பருத்தியப்பர் கோயில் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் அருண்குமார், அவர்கள் சகோதரர் ராஜ்குமார் மற்றும் நண்பர் தெரு அன்பு நகர் பகுதியில் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் முகேஷ் கண்ணன் ஆகிய மூவரும் ஒரே பைக்கில் பட்டுக்கோட்டை பைபாஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே மற்றொரு பைக்கில் வந்த அப்துல் ரகுமான் பைக் மீது அருண்குமார் ஓட்டி வந்த பைக் உரசி உள்ளது. இதனால் இரு தரப்பினர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. . அப்போது அப்பகுதியில் நின்றிருந்த மீனாட்சி சுந்தரம் மற்றும் மற்றொரு ஆட்டோ டிரைவர் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.
அருண்குமார் உட்பட மூணு பேரும் சேர்ந்து மீனாட்சி சுந்தரம் உட்பட மூணு பேரையும் தாக்கி உள்ளனர். இதுகுறித்து மீனாட்சி சுந்தரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷ் கண்ணன் ராஜ்குமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள அருண்குமாரை தேடி வருகின்றனர்.