திருச்சி வயலூர் சாலை சீனிவாசா நகரில் ஜெயரங்கா இயற்கை மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் ஒருவர், மருத்துவமனைக்குள் தூக்கி ல் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் செய்தது. தகவல் அறிந்து வந்த அந்த வாலிபரின் உறவினர்கள், வாலிபரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருக்கிறார்கள் என குற்றம் சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.