திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காளபேரி என்ற கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் அஜீத்குமார்(27), புஷாந்தம் மகன் சதீஷ்(29) இவர்கள் லால்குடி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் தங்கியிருந்து ரோடு போடும் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார்கள். இருவரும் நண்பர்கள்.
நேற்று இரவு அஜீத்குமாரும் சதீசும் மது போதையில் தகராறில் ஈடுபட்டனர். அப்போது சதீஷ் இரும்பு கம்பியை எடுத்து அஜீத்குமார் தலையில் தாக்கினார். இதில் அஜீத் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது., போதையில் இருந்த அவர் அப்படியே போய் படுத்துக்கொண்டார். நள்ளிரவில் அவருக்கு நிலைமை மோசமானது.
உடனடியாக அவரை லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அஜீத்குமார் இறந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.